×

உரிய பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்பட்ட வெடி மருந்துகள், டிராக்டர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, மே 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் வனவியல் விரிவாக்க மையம் அருகில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய பாதுகாப்பின்றி கிணற்றுக்கு வைக்கப்படும் வெடிபொருட்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் தீவிர சோதனை செய்ததில் அதில் ஒரு பெட்டியில் 211 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 229 டெட்டனேட்டர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் உரிய பாதுகாப்பின்றி டிராக்டரில் எடுத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் எலவனாசூர்கோட்டை பகுதியை சேர்ந்த குப்பன் (40), அவருடைய உதவியாளர் வடிவேல் (48) ஆகிய இருவரிடம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து நகர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் அதனை ஆழப்படுத்துவதற்காக இந்த பாறை உடைக்க பயன்படும் வெடி மருந்து எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் வெடி மருந்துகளை உரிய பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

The post உரிய பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்பட்ட வெடி மருந்துகள், டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Urban Forestry Extension Center ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை...